உள்ளூர் செய்திகள்

ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போட்டி தேர்வு நடத்தப்பட்டது.மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு போட்டி தேர்வை எழுதினர்.

தென்காசி:

தென்காசி தீயணைப்பு மீட்பு பணித்துறை மாவட்ட அலுவலர் கணேசன் ஆணையின்படி, பள்ளி மாணவர்களுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போட்டித் தேர்வானது நடத்தப்படுகிறது.

அதன்பேரில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுக்கு செங்கோட்டை தீயணைப்பு மீட்பு பணித்துறை சிறப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் மற்றும் நிலைய பணியாளர்கள் மாரிமுத்து, ஆல்பர்ட், கோமதி சங்கர் ஆகியோர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போட்டி தேர்வை நடத்தினர்.

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு போட்டி தேர்வை எழுதினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் அருள் வர்ஷலா மற்றும் ஒருங்கிணைப்பாளர் டேனியல் ஆகியோர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT