உள்ளூர் செய்திகள்

பேக்கரி கடைக்குள் புகுந்த ஆட்டோ

பஜாரில் உள்ள பேக்கிரி கடை முன்பு உள்ள டீ கடை முன்பு வழக்கமாக பரபரப்பாக இருந்துள்ளது.பேக்கரி கடை முன்பக்க கண்ணாடிகளை உடைத்து பொருட்கள் சேதமடைந்துள்ளது.

உடன்குடி:

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள பரமன்குறிச்சி பஜார் எப்போதும் பரபரப்பாக இயங்க கூடிய பகுதியாகும்.

திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில் சாலையில் உள்ள இந்த பகுதியில் எப்போதும் வாகன போக்கு வரத்து அதிகமாக இருக்கும்.

சம்பவத்தன்று இந்த பஜாரில் உள்ள பேக்கிரி கடை முன்பு உள்ள டீ கடை முன்பு வழக்கமாக பரபரப்பாக இருந்துள்ளது.

அப்போது திருச்செந்தூரில் இருந்து வந்த ஆட்டோ ஒன்று கடையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி பேக்கரிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. ஆட்டோ டிரைவர் வாகனத்தை ஓட்டி வரும்பொழுது திடீரென உடல்நலகுறைவு ஏற்பட்டதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கடையில் நின்று கொண்டிருந்த 3 பேர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் உட்பட 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

மேலும் பேக்கரி கடை முன்பக்க கண்ணாடிகளை உடைத்து பொருட்கள் சேதமடைந்துள்ளது.

இந்த நிலையில் கடை முன் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்து ஆட்டோ மோதும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT