நிலக்கோட்ைட:
நிலக்கோட்டை அருகே எஸ்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பாரத ரோஜா (வயது 36). இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆனந்தராஜா (30) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று பாரதரோஜா வீட்டுக்கு வந்த ஆனந்தராஜ், அவரது உறவினர்கள் குமார், பழனியம்மாள், தோப்புச்சாமி ஆகிய 4 பேரும் பாரதரோஜாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும் வீட்டுக்குள் வைத்தும் பூட்டினர். இது குறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஆனந்தராஜா, பழனியம்மாள் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் ஆனந்தராஜா கொடுத்த புகாரின் பேரில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து பாரதரோஜாவை கைது செய்தனர்.