உள்ளூர் செய்திகள்

சாமளாபுரம் லிட்ரசி மிஷன் மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

இயேசு கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ்குடில் அமைக்கப்பட்டிருந்தது.கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள்,ஆசிரியைகள் செய்திருந்தனர்.

மாலை மலர்

மங்கலம் :

திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பகுதியில் லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.விழாவிற்கு லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தலைவர் ஆர்.ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.

விழாவில் பள்ளி மாணவ,மாணவிகளின் கிறிஸ்துமஸ் பாடல், நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இயேசு கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ்குடில் அமைக்கப்பட்டிருந்தது. விழாவில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள், இனிப்புகள் வழங்கப்பட்டது.

விழாவில் லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தலைவர் ஆர்.ராமமூர்த்தி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும், வரும் புத்தாண்டு பெருமையாலும்,அன்பாலும்,பண்பாலும் பிறக்கட்டும்" என புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடுகளை லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள்,ஆசிரியைகள் செய்திருந்தனர்.