பல்லடம் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது தாலுகா அலுவலகத்தில் துறை ரீதியான கோப்புகளை ஆய்வு செய்தார். சர்வே பணிகளை தாமதம் இன்றி செய்து தரவும், நீதிமன்ற உத்தரவுகளை உரிய கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும் அங்குள்ள திருப்பூர் மாவட்டத்திற்குரிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசாரின் 24 மணி நேர கண்காணிப்பில் உள்ள பாதுகாக்கப்பட்ட அறையை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது பல்லடம் தாசில்தார் நந்தகோபால் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.