அரசு திட்டப்பணிகளை  சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு செய்த காட்சி.  
உள்ளூர் செய்திகள்

அரசு திட்டப்பணிகளை சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு

அரசுதுறை உயர் அதிகாரிகள் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டனர். கடந்த காலங்களில் நடந்த தவறுகள் குறித்து சில நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய பொதுக்கணக்கு குழுவினர் கூறியுள்ளனர்.

திருப்பூர்:

திருப்பூரில் இன்று தமிழ்நாடு சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் அரசு திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர். பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ.,தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் தொகுதி சுதர்சனம் ,திருத்துறைப்பூண்டி மாரிமுத்து , வீரபாண்டி ராஜமுத்து ஆகியோருடன் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கலெக்டர் வினீத் மற்றும் அரசுதுறை உயர் அதிகாரிகள் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் கழிவுநீர் வடிகால் , பேருந்து நிலைய கட்டிட பணிகள் , புதிய மருத்துவகல்லூரி பணிகள் உட்பட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தனர்.பின்னர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ.,நிருபர்களிடம் கூறுகையில், மத்திய பொது கணக்கு குழு தணிக்கை செய்து கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் துறை வாரியாக ஆய்வு செய்கிறோம் .

மேலும் கடந்த காலங்களில் நடந்த தவறுகள் குறித்து சில நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய பொதுக்கணக்கு குழுவினர் கூறியுள்ளதாகவும் , அதன் அடிப்படையில் ஆய்வு நடைபெறுவதாகவும் கூறினார். என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் , பொதுக்கணக்கு குழு என்ன பரிந்துரை செய்தார்கள் என்பதையும் மதியம் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முழுமையாக தெரி விக்கப்படும் என்றார்.