உள்ளூர் செய்திகள்

கோவையில் குடிபோதையில் கோர்ட்டுக்கு சென்றவர் கைது

ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த மின்னல் நாகராஜ் குடிபோதையில் வந்து தகராறு செய்தார்.

கோவை:

கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் மின்னல் நாகராஜ் (வயது 53). இவர் மீது ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை நீதி மன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த மின்னல் நாகராஜ் குடிபோதையில் வந்து தகராறு செய்தார். இது குறித்து கோர்ட் வரவேற்பு அதிகாரி ரங்கநாதன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.

உடனடியாக போலீசார் கோர்ட்டுக்கு விரைந்து சென்று மின்னல் நாகராஜை கைது செய்து ெஜயிலில் அடைத்தனர். 

SCROLL FOR NEXT