உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தற்கொலை

தீராத வயிற்றுவலியால் அவதிபட்டு வந்தவர் தற்கொலை செய்து கொண்டார் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

மாலை மலர்

அரியலூர்,

வி.கைகாட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முருகேசன் மகள் நிஷா (எ) பிரேமா (19). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முருகேசன் மனைவியுடன் அஸ்தினாபுரம் கிராமத்திற்கு வளையல் வியாபாரத்திற்கு சென்று உள்ளார். அப்போது பிரேமாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விக்கிரமங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.