உள்ளூர் செய்திகள்

முந்திரி காட்டில் எரிந்து கொண்டிருந்த மனித உடல்

ஜெயங்கொண்டம் அருகே முந்திரி காட்டில் எரிந்து கொண்டிருந்த மனித உடலால் பரபரப்பு நிலவியது தீயை அணைத்து பிணத்தை மீட்டு போலீசார் விசாரணை

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வெண்மான் கொண்டான் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காட்டில் இருந்து தீ எரிந்து புகை வெளியாவது குறித்து, அந்த பகுதியாக சென்ற பொதுமக்கள் உடையார்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் அந்த இடத்திற்கு வந்து போலீசார், பார்த்த போது மனித உடல் எரிந்து கொண்டிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே சாக்கு உதவியுடன் உடலின் மீது எந்த தீயை அணைத்து உள்ளனர். இருப்பினும் உடல் முழுவதும் எரிந்த நிலையில் கருகிற எலும்புகள் மட்டுமே மிஞ்சியிருந்தது. இறந்தது ஆணா, பெண்ணா, என்பது கூட தெரியவில்லை.

இதனை அடுத்து உடையார்பாளையம் போலீசார் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைத்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் டிக்சி, மோப்பம் பிடித்தவாறு, வெண்மான் கொண்டான் கிராமம் மில் வரை சென்றது.

நேற்று காலை வடகடல்- குடிகாடு பிரிவு சாலையில் ரத்தம் அதிக அளவில் கொட்டிகிடந்தது குறித்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில் இன்று இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.இந்த இரண்டு சம்பவங்களுக்கும் சாலை மார்க்கமாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரமும், வயல்வெளி மார்க்கமாக சுமார் 3 கிலோ மீட்டர் இடைவெளி உள்ளது.இது குறித்தும் உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SCROLL FOR NEXT