உள்ளூர் செய்திகள்

அரியலூரில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வில் 2854 மாணவர்கள் கலந்து கொண்டனர்

அரியலூரில் 2854 மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு எழுதினர் 2,906 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 52 பேர் தேர்வு எழுத வரவில்லை.

மாலை மலர்

அரியலூர்:

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு தமிழகம் முழுவதும் என்எம்எம்எஸ் தேர்வு நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்டத்தில், வட்டார அளவில் 11 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 2,854 மாணவ, மாணவிகள் எழுதினர்.

2,906 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 52 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதில் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி பார்வையிட்டார். பள்ளி, கல்வி துணை ஆய்வாளர் பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.