கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு புதிய கமிஷனர் நியமணம்

நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பேரூராட்சிகளின் கூடுதல் பொறுப்பு, அதன் அருகேயுள்ள பேரூராட்சிகளின் செயல் அலுவலர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூர்:

திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட 28 சிறப்பு நிலை பேரூராட்சிகள், நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என ஆக.24ல் சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த பேரூராட்சிகளில் பணிபுரிந்து வந்த செயல் அலுவலர்கள் வேறு பேரூராட்சிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பேரூராட்சிகளின் கூடுதல் பொறுப்பு, அதன் அருகேயுள்ள பேரூராட்சிகளின் செயல் அலுவலர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் தரம் உயர்த்தப்பட்ட பேரூராட்சிகள் நகராட்சி மண்டல இயக்குனர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என்ற உத்தரவை கடந்த 9ம் தேதி நகராட்சி நிர்வாக இயக்குனர் பிறப்பித்தார்.

இதனால் புதிய நகராட்சிகளுக்கு கமிஷனர்கள் நியமிக்கப்பட்டனர். அவ்வகையில் திருமுருகன்பூண்டி இரண்டாம் நிலை நகராட்சிக்கு திருப்பூர் நகராட்சி மண்டல இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த முகம்மது சம்சுதீன், பதவி உயர்வு பெற்று கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.