அண்ணாமலை 
உள்ளூர் செய்திகள்

தி.மு.க.வின் அச்சுறுத்தல்களை நீதிமன்றத்தில் சந்திப்பேன்- அண்ணாமலை பதில்

தி.மு.க.வின் முதன்மை குடும்பம், சாதாரண சாமானியனான என்னையும், அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்துக்கு, சரிசமமாக நடத்துகிறது என அண்ணாமலை கூறி உள்ளார்.

மாலை மலர்

சென்னை:

முதல்வரின் துபாய் பயணம் குறித்து அவதூறாக விமர்சனம் செய்த அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 100 கோடி ரூபாய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் திமுக சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திமுக சார்பில்  எடுக்கப்படும் சட்ட போராட்டத்தை அவரால் தாங்க முடியாது என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த எச்சரிக்கைக்கு அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு திமுக கட்சி, என் மீது, மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன். தி.மு.க.வின் முதன்மை குடும்பம், சாதாரண சாமானியனான என்னையும், அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்துக்கு, சரிசமமாக நடத்துகிறது.

நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.  திமுகவின்  அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன். தமிழகத்துக்கான, என் போராட்டம் தொடரும்... துணிவுடன். மக்கள் துணையுடன்.

இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.