ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள். 
உள்ளூர் செய்திகள்

நத்தத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பதவி உயர்வு, 2 அல்லது 3 மையங்கள் பொறுப்பு பார்ப்பதை தவிர்த்தல் மற்றும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என 9 கோரிக்கைகள்.அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தைகளின் நலன் கருதி கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை வழங்குவது போல் அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாத காலம் விடுமுறை வழங்கிட வேண்டும்.

10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்த விதமான நிபந்தனையின்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 மையங்கள் பொறுப்பு பார்ப்பதை தவிர்க்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

அங்கன்வாடி மையங்களில் மின் கட்டணம் அரசே கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். நத்தம் தொகுதி செயலாளர் சண்முகவள்ளி தலைமையில், பொறுப்பாளர்கள் நித்யா, பிரேமா, ஈஸ்வரி உள்ளிட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT