கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள கோட்டமருதூர் கிராமம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பத்தியநாதன் மனைவி சம்மனசுமேரி (வயது 57). இவர் தனது சொந்த ஊரிலிருந்து வேளாங்கண்ணிக்கு நடை பயணமாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்று இருக்கிறார். திருக்கோவிலூர் செவலை ரோட்டின் வழியாக வீரட்டகரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டி ருந்தபோது எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவர் மோதியது.
இதில் சம்மன சுமேரிக்கு பின் தலையில் அடிபட்டது. உடன் அவரை திருக்கோ விலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பா க்கத்தில் உள்ள அரசு மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் அனும தித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் விரைந்து சென்று விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.