பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிரா மணியில் இருந்து சத்திபாளை யம் செல்லும் சாலையில், சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வெயிலின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்தார்.
அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி முதியவர் உயிரிழந்தார்.
இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இறந்துபோன முதியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எங்கிருந்து இந்த பகுதிக்கு வந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.