கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தென்சங்கம்பாளையத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி.
இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது கணவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதனையடுத்து மூதாட்டி அவரது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் மூதாட்டிக்கு அவரது மருமகளுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மூதாட்டி மகன் மற்றும் மருமகளை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு மூதாட்டி வீட்டின் கதவை பூட்டி விட்டு படுத்து தூங்கினார். நள்ளிரவு 1.40 மணியளவில் வாலிபர் ஒருவர் மது போதையில் மூதாட்டி வீட்டின் கதவை திறந்து அத்துமீறி நுழைந்தார்.
பின்னர் அவர் மூதாட்டியின் மீது பாய்ந்தார். இதில் அதிர்ச்சியடைந்த மூதாட்டி சத்தம் போட்டார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் வாலிபர் தப்பி ஓடி இருட்டில் மறைந்து விட்டார்.
இதுகுறித்து மூதாட்டி கோட்டூர் போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் வீட்டில் படுத்து தூங்கிய மூதாட்டி மீது பாய்ந்த வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.