உள்ளூர் செய்திகள்

ஆலங்குளம் அருகே நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி

ராஜன், கீழச்சுரண்டை சேர்ந்தவர் தங்கசாமி இவர்கள் இருவரும் ஆலங்குளம் சென்று விட்டு நேற்றிரவு சுரண்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். முத்துகிருஷ்ண பேரி அருகே சென்றபோது சுரண்டையில் இருந்து நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி இவர்களது மோட்டடார் சைக்கிள் மீது மோதியது.

ஆலங்குளம்:

சுரண்டை சிவகுருநாதபுரம் பொட்டல் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது 45). எலக்ட்ரீசியன். கீழச்சுரண்டை சேர்ந்தவர் தங்கசாமி (59). தொழிலாளி. இவர்கள் இருவரும் ஆலங்குளம் சென்று விட்டு நேற்றிரவு சுரண்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

ஆலங்குளத்தை அடுத்துள்ள முத்துகிருஷ்ண பேரி அருகே சென்றபோது சுரண்டையில் இருந்து நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி இவர்களது மோட்டடார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ராஜன் முகத்தில் அடிபட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தங்கசாமிக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது .

இச்சம்பவம் குறித்து அறிந்த வீரகேரளம்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கசாமியை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ராஜனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.