கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கணேஷ் நகரை சேர்ந்தவர் பாலாஜி சுப்பிரமணி யம்(வயது 45).
சம்பவத்தன்று இவர் முனிசிபல் ஆபீஸ் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குயிருப்பில் வசிக்கும் நண்பர் தங்கராஜ் என்பவரை பார்ப்பதற்காக சென்றார்.
3-வது மாடிக்கு சென்று நண்பரை பார்த்து விட்டு கீழே இறங்க முயன்றார். அப்போது திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு ஜன்னல் வழியாக 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிசிக்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பாலாஜி சுப்பிரமணியம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.