திண்டுக்கல் திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டு இருந்த மெகா பேனர். 
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல்லில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

திண்டுக்கல்லில் வலிமை படம் திரையிடப்பட்டதால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

மாலை மலர்

திண்டுக்கல்:

நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் திண்டுக்கல் நகரில் 3 தியேட்டரிலும், பழனி, வத்தலக்குண்டு, தேனி, கம்பம், சின்னமனூர், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று திரையிடப்பப்டது.

2 வருடத்துக்கு பிறகு நடிகர் அஜித்தின் படம் திரைக்கு வந்ததால் ரசிகர்கள் நேற்று இரவு முதல் தியேட்டர் முன்பு காத்திருந்து சிறப்பு காட்சியை கண்டு ரசித்தனர். தியேட்டர் வளாகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் அஜித்தின் கட்அவுட்டுகள் வைக்கப்பட்டு இருந்தன.

தியேட்டர்கள் முன்பு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் நடிகர் அஜித்தின் கெட்அப் வடிவில் உடை அணிந்து ரசிகர்கள் தியேட்டர் முன்பு ஆட்டம் போட்டனர்.