உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் குழந்தைகள் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கிய அ.தி.மு.க. நிர்வாகி

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கி அய்யாத்துரை பாண்டியன் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார். நிகழ்ச்சியில், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சங்கரன்கோவிலில் உள்ள விண்மின் இல்லத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கி, உணவு பரிமாறி குழந்தைகளோடு இணைந்து தீபாவளியை அ.தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் உற்சாகமாக கொண்டாடினார்.

நிகழ்ச்சியில், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், குருவிகளும் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கிருஷ்ணசாமி, கோவிந்தன், தேவர்குளம் கிளை செயலாளர் சண்முகசுந்தரம், களப்பாகுளம் பசும்பொன், களப்பாகுளம் கிளை செயலாளர் முருகன், எழில் நகர் கிளை செயலாளர் பாபு கதிரேசன், என்.ஜி.ஓ. காலனி கிளை செயலாளர் ராஜா, இருமன்குளம் பசும்பொன், சங்கரன்கோவில் காங்கேயன் என்ற கார்த்தி, இளைஞர் அணி பட்டு ராஜா, கார்த்திக் தங்கமுத்து, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் நடராஜன், ஞானசேகரன், மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

SCROLL FOR NEXT