கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்-மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து முதியவர் பலி

பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது நாய்குறுக்கே சென்றதால் வண்டியில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் முதியவர் உயிரிழந்தார்.

மாலை மலர்

கிருஷ்ணகிரி:

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த கூத்தாண்டஹள்ளி பகுதியைச்சேர்ந்தவர் நாகராஜ் (வயது 60). 

இவரும் தொட்டதிம்மனஹள்ளி பகுதியை சேர்ந்த முருகேசன் (60) என்பவரும் கடந்த, 13-ந் தேதி  கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலை, சோக்காடி கூட்டுரோடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை நாகராஜ் ஓட்டி சென்றார். அப்போது சாலையின் குறுக்கேதிடீரென்று நாய் வந்தது. இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நாகராஜ் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். முருகேசன் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.