காளியம்மன் திருநடனம் நடந்தது. 
உள்ளூர் செய்திகள்

காளியம்மன் கோவிலில் ஆடி மாத விழா

இந்த ஆண்டு ஆடி மாத விழாவில் காளியம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது.காளியம்மன் வேடமடைந்து பக்தர்கள் முக்கிய வீதிகளில் வலம் வந்து அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள மாப்பிள்ளைக்குப்பம் பகுதியில் பழமையான சொர்ண மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத விழாவில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேல் காளியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக காளியாட்ட விழா நடைபெறவில்லை. அதனால், இந்த ஆண்டு ஆடி மாத விழாவில் காளியம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து காளியாட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காளியம்மன் வேடமடைந்து பக்தர்கள் முக்கிய வீதிகளில் வலம் வந்து அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் மேளதாளங்கள் முழங்க காளியம்மன் நடனமாடியதை பக்தர்கள் கண்டுகளித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT