உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே மினி லாரியில் ஆற்று மணல் கடத்திய வாலிபர் கைது

திருவெண்ணைநல்லூர் அருகே மினி லாரியில் ஆற்று மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.மினி லாரியை போலீசார் வழிமறித்து நிறுத்தி சோதனையிட்டனர்.

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் போலீசார் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஆனத்தூரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மினி லாரி ஒன்று வேகமாக வந்தது. மினி லாரியை போலீசார் வழிமறித்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது மினி லாரியில் தென்பெண்ணையாற்று மணல் கடத்தப்பட்டதை கண்டனர். இதையடுத்து மினிலாரியை ஓட்டிவந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் பண்ருட்டி வட்டம் உளுந்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT