உள்ளூர் செய்திகள்

வீராணம் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் மீது கல் வீசிய நபர்களை தேடி வந்தனர். பஸ் மீது கல்வீசிய பெரிய வீராணம் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் மகன் பாலாஜி என்பவரை கைது செய்தனர்.

சேலம்:

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வலசையூருக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் கடந்த 28-ந் தேதி பெரிய வீராணம் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது மர்ம நபர்கள் 2 பேர் பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஓடினர். இது குறித்து அரசு பஸ் கண்டக்டர் வீராணம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் மீது கல் வீசிய நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், பஸ் மீது கல்வீசிய பெரிய வீராணம் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் மகன் பாலாஜி (வயது 18) என்பவரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கைதான பாலாஜியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, வாய்க்கால் பட்டறை பகுதியில் பஸ்சில் ஏறிய போது அந்த பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர், தன்னிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பஸ் மீது கல்வீசியதாகவும் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT