உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் இளம் பெண் மாயம்

பிரதிஷா கடந்த 2-ந் தேதி மாலை 6மணிக்கு வெளியில் சென்றவர் வீடு திரும்ப வில்லை. சீராளன் ஆசை வார்த்தை கூறி பிரதிஷாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளார்.

கடலூர்:

பண்ருட்டி ெரயில்வே காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பிரதிஷா (19), இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.இவர் கடந்த 2-ந் தேதி மாலை 6மணிக்கு வெளியில் சென்றவர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இவரது தாயார் லதா பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில் ெரயில்வே காலனியை சேர்ந்த சீராளன் ஆசை வார்த்தை கூறி பிரதிஷாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளார். இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை வலை வீசி தேடி வருகிறார்.

SCROLL FOR NEXT