உள்ளூர் செய்திகள்

மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர்

சரியாகி விடும் என நம்பிகை தெரிவித்தனர். கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை,

கோவை போத்தனூரை சேர்ந்தவர் ஆசிம் (வயது 28). இவர் கோவை மேற்கு அைனத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கும் சிவகங்கையை சேர்ந்த வசீம் அக்ரம் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது எனது பெற்றோர் 50 பவுன் தங்க நகைகள், பாத்திரங்கள் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்தனர்.திருமணமான 2 நாட்களுக்கு பிறகு எனது கணவர் என்னிடம் சரியாக பேசாமல் இருந்து வந்தார். இதுகுறித்து நான் எனது மாமனார்- மாமியாரிடம் கூறினேன். அதற்கு அவர்கள் எல்லாம் சரியாகி விடும் என நம்பிகை தெரிவித்தனர்.

இந்த நிலையில் எனது கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதனை பற்றி நான் கேட்டால் சரியாக பதில் கூறாமல் இருந்து வருகின்றனர்.இதனால் நான் கடந்த சில நாட்களாக மனவேதனை அடைந்து வருகிறேன். எனவே விவாகரத்து வாங்காமலும், எனக்கு தெரியாமலும் 2-வது திருமணம் செய்து கொண்ட எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து போலீசார் வசீம் அக்ரம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.