என்ஜினில் சிக்கிய உடலை ரெயில்வே ஊழியர்கள் மீட்ட காட்சி. 
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ரெயிலை நிறுத்தி சோதனை யிட்ட போது என்ஜின் முன் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் சிக்கி இருந்தது.போலீசார் அந்த உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே மைசூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டு இருந்த ரெயில் என்ஜின் பகுதியில் ஒரு ஆணின் உடல் சிக்கிக் கொண்டு இருந்ததை பார்த்த கேட் கீப்பர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

ரெயிலை நிறுத்தி சோதனை யிட்ட போது என்ஜின் முன் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் சிக்கி இருந்தது. போலீசார் அந்த உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் யார்? அவர் எவ்வாறு என்ஜினில் சிக்கினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT