உள்ளூர் செய்திகள்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் காதல் திருமணம் செய்த இளம் பெண் திடீர் மாயம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் காதல் திருமணம் செய்த இளம் பெண் திடீர் மாயமானார் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

மாலை மலர்

திருச்சி:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நாடார் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சுகந்தி மீரியம்(வயது 30 ). இவர் ராஜேசை கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு செல்வதற்காக திருச்சிக்கு வந்துள்ளனர். மத்திய பஸ்நிலையத்தில் சுகந்தி மீரியம் கழிவறைக்குச் சென்றார்.பின்னர் திரும்பி வரவில்லை இது குறித்து அவரது கணவர் ராஜேஷ் கன்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.