உள்ளூர் செய்திகள்

குன்னூர் பகுதியில் உலா வந்த மரநாய்

அவ்வப்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைபாதையில் தென்படுவது வழக்கம். மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் மரநாய் வனபகுதிக்குள் சென்று மறைந்தது

மாலை மலர்

அருவங்காடு,

குன்னூர் பகுதியில் சிறுத்தை, யானை, கரடி, கடமான், மரநாய், குரங்குகள் என அரியவகை விலங்குகள் அதிகமாக உள்ளன. இவை அவ்வப்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைபாதையில் தென்படுவது வழக்கம்.

இந்த நிலையில் குன்னூர் தீயணைப்பு அலுவலக பகுதியில் உள்ள ஒரு மரத்தில் மரநாய் தென்பட்டது. இதனை உள்ளூர்வாசிகளும், சுற்றுலா பயணிகளும் போட்டி போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்தனர். மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் மரநாய் வனபகுதிக்குள் சென்று மறைந்தது