கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 62) இவரது கணவர் அருணாச்சலம் (73). இவர்களுக்கு பிரசாந்த், கவாஸ்கர், என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மகேஸ்வரி நேற்று காலை சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பேங்கில் பணம் எடுக்க சென்றார். பின்னர் பேங்கில் பணம் எடுத்துவிட்டு வீட்டிற்கு சாலையில் நடந்து வந்துள்ளார்.
அப்போது மகேஸ்வரி மூதாட்டியின் பின்னால் பதிவெண் இல்லா மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் மூதாட்டியிடம் இருந்து பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர். இதனையடுத்து மூதாட்டி சத்தம் ேபாட்டுள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் பணத்தை திருடிச் சென்றவர்களை பிடிக்க முயன்றனர் ஆனால் மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் சென்று விட்டனர். 62,000 ரொக்கம் பணம், செல்போன் இருந்ததாக முதியவர் கூறினார். இதுகுறித்து சின்னசேலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி மூலம் கொள்ளையர்களை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.