உள்ளூர் செய்திகள்

மாவடிபண்ணையில் வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் கைது

கோபாலகிருஷ்ணன் வீட்டில் சுபாஷ் என்பவர் திருட முயற்சி செய்துள்ளார். ஆத்திரமடைந்த சுபாஷ், கோபாலகிருஷ்ணனை அவதூறாக பேசி விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி அருகே உள்ள மாவடிபண்ணை மேலத்தெரு சர்ச்தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது74). இவரது வீட்டில் அதே பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (21) என்பவர் திருட முயற்சி செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி யடைந்த கோபாலகிருஷ்ணன், வாலிபரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ், கோபாலகிருஷ்ணனை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கி ருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இது தொடர்பாக கோபாலகிருஷ்ணன் ஆழ்வார்திருநகரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் வழக்குப்பதிவு செய்து சுபாசை கைது செய்தார்.

SCROLL FOR NEXT