உள்ளூர் செய்திகள்

கடலூரில் கல்லூரிக்கு சென்ற மாணவியை கடத்திய வாலிபர்,

வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. கல்லூரி மாணவியையும், வாலிபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்

கடலூர்:

கடலூர் வண்டி ப்பாளையம் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி படித்து வரும் மாணவி நேற்று காலை வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லைஅதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கல்லூரி மாணவியை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. மேற்கொண்டு மாணவி எங்கு சென்றார் என விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவி யை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறதுஇது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தி செல்லப்பட்ட கல்லூரி மாணவியையும், வாலிபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

SCROLL FOR NEXT