மாரிமுத்து. 
உள்ளூர் செய்திகள்

லாரி மோதி வாலிபர் பலி

தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.லாரி மாரிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பட்டுக்கோட்டை:

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது42).

இவர் தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.

அப்போது மாரியம்மன் கோயில் அருகே பட்டுக்கோட்டை மெயின் ரோட்டை கடக்க முயன்றார்.

அப்போது முத்துப்பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வாகனம் மாரிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்தார்.

இது குறித்து பட்டுக்கோ ட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.