உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே சாமி ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே சாமி ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார். பொதுமக்கள், உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

கள்ளக்குறிச்சி:

உளுந்தூர்பேட்டை கிளாபாபாளையத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 23). அதே ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில், சாமி ஊர்வலத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, சீரியல் பல்புகள் ஒளிராமல் நின்று போனது. இதனையடுத்து, அதனை சரிசெய்யும் பணியில் பச்சையப்பன் ஈடுபட்டார். அப்போது மின்சாரம் தாக்கி பச்சையப்பன் தூக்கி வீசப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்ட பொதுமக்கள், உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், பச்சையப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இது குறித்து உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெகடர் அலெக்ஸ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT