ஆண் உடல் எரிந்த நிலையில் உள்ளதை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

சானமாவு வனபகுதியில் வாலிபர் எரித்து கொலை

அப்போது உடல் அழுகிய நிலையில் இருந்தது.மர்ம நபர்கள் கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருக்க தீவைத்து எரித்தது தெரியவந்தது.

மாலை மலர்

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் கிடப்பதாக உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, உத்தனப்பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் குமுதா, வருவாய் அலுவலர் ராஜக்குமார் ஆகியோர் விரைந்து சென்று பார்வை யிட்டனர்.

அப்போது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரை மர்ம நபர்கள் கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருக்க தீவைத்து எரித்தது தெரியவந்தது.

இதனால் அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

இதையடுத்து போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.