உள்ளூர் செய்திகள்

கோடை விடுமுறைக்கு பெரியப்பா வீட்டிற்கு சென்ற தூக்கணாம்பாக்கம் மாணவன் சாவு

யுவராஜ் (வயது 18).இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்திருந்தார். நள்ளிரவு யுவராஜ், தனது பெரியப்பா வீட்டில் படுத்து தூங்–கிக்– கொண்–டி–ருந்–தார். அப்–போது அரு–கில் இருந்த டேபிள் மின்விசிறி, யுவராஜ் மீது விழுந்தது.

கடலூர்:

கட–லூர் மாவட்–டம் தூக்–க–ணாம்–பாக்–கம் மாதா கோவில் தெருவை சேர்ந்–த–வர் நாகப்–பன் மகன் யுவ–ராஜ் (வயது 18).

இவர் அதே கிரா–மத்–தில் உள்ள அரசு மேல்–நி–லைப்–பள்–ளி–யில் பிளஸ்-2 படித்து முடித்–தி–ருந்–தார். இவர் கடந்த ஒரு வார–மாக தனது பெரி–யப்பா வீடான விழுப்–பு–ரம் பானாம்–பட்–டில் தங்–கி–யி–ருந்–தார்.

சம்பவத்தன்று நள்–ளிரவு யுவ–ராஜ், தனது பெரியப்பா வீட்–டில் படுத்து தூங்–கிக்– கொண்–டி–ருந்–தார். அப்–போது அரு–கில் இருந்த டேபிள் மின்–வி–சிறி, யுவ–ராஜ் மீது விழுந்–தது.

மாணவனின் அலரல் சத்–தம் கேட்டு வீட்–டில் இருந்–த–வர்–கள் எழுந்து பார்த்–த–போது யுவ–ராஜ் மயங்–கிக் –கி–டந்–தார். உடனே அவரை மீட்டு சிகிச்–சைக்காக விழுப்–பு–ரம் அரசு மருத்–து–வ–ம–னையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரி–சோதித்த டாக்–டர், மாணவன் யுவராஜ் ஏற்–க–னவே இறந்து விட்–ட–தாக கூறி–னார். அவர் எப்–படி இறந்–தார்? என்–பது குறித்து விழுப்புரம் தாலுகா போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து விசா–ரணை நடத்தி வரு–கின்–ற–னர்.

SCROLL FOR NEXT