வேளாங்கண்ணி கடற்கரையில் பனை விதைகளை விதைக்கும் பணி நடந்தது.  
உள்ளூர் செய்திகள்

வேளாங்கண்ணி கடற்கரையில் பனை விதைகளை விதைக்கும் திட்டம்

வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் பணி நடந்தது.பனை மர விதை நடுதல் மற்றும் பாதுகாத்தல் குறித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது.

நாகப்பட்டினம்:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் அ. டயானா ஷர்மிளா தலைமையில், பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தனர்.

இதில் வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் எம். பொன்னுசாமி, கீழ்வேளூர் வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் வருவாய் துறை அலுவலகர்கள், பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது பனை மர விதை நடுதல் மற்றும் பாதுகாத்தல் குறித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது.