உள்ளூர் செய்திகள்

பகண்டை கூட்டு ரோடு அருகே சாராயம் காய்ச்சியவர் கைது

பகண்டை கூட்டு ரோடு அருகே சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.போலீசார் அவிரியூர் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

மாலை மலர்

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் பகண்டை கூட்டு ரோடு போலீசாருக்கு அவிரியூர் பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் போலீசார் அவிரியூர் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது எகால் கிராமத்தைச் சேர்ந்த ஜான் பீட்டர் (வயது 45) என்பவர் அவரது நிலத்தில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் ஜான் பீட்டரை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரிடமிருந்து 75 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.