உள்ளூர் செய்திகள்

புளியம்பட்டி தேவாலயத்துக்கு பாதயாத்திரை சென்ற ஓட்டல் உரிமையாளர் மோட்டார் சைக்கிள் மோதி பலி

பெனடிக்ட் அந்தோணி ராஜ் கடந்த 7-ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள தேவாலயத்திற்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார்.பாளை பர்கிட் மாநகர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

நெல்லை:

பாளை செயின்ட்பால்ஸ் ரோட்டை சேர்ந்தவர் பெனடிக்ட் அந்தோணி ராஜ்(வயது 47). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். மேலும் ஓட்டலும் நடத்தி வந்தார்.

கடந்த 7-ந்தேதி இவர் தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள தேவாலயத்திற்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். பாளை பர்கிட் மாநகர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் பெனடிக்ட் அந்தோணிராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாளை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.