உள்ளூர் செய்திகள்

மேல்மலையனூர் அருகே வகுப்பறையில் பாடம் நடத்திய தலைமையாசிரிைய மயங்கி விழுந்து சாவு

சுப்பிரமணி மனைவி தனலட்சுமி (57) புது மரக்கோணம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணி புரிந்து வந்தார். மயங்கி விழுந்து இறந்தது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம்:

மேல்மலையனூர் அருகே பிண்ணணூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி தனலட்சுமி (57) புது மரக்கோணம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணி புரிந்து வந்தார்.நேற்று பிற்பகல் தனலட்சுமி 5-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக சக ஆசிரியர்கள் டாக்டரை வரவழைத்து பரிசோதனை செய்தனர்.தனலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். இதனால் அந்த பள்ளியில் உள்ள ஆசியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தலை மையாசிரியை வகுப்பறை யில் மயங்கி விழுந்து இறந்தது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.