உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி தொழிலாளி பலியானார்.பண்ருட்டி வழியாக சென்னை செல்லும் அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

கடலூர்:

பண்ருட்டி அடுத்த வேகாக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 48). கூலித் தொழிலாளியான இவர் மோட்டார் சைக்கிள் பண்ருட்டிக்கு வந்தார். பண்ருட்டியில் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை கொஞ்சிக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது கும்பகோணத்தில் இருந்து பண்ருட்டி வழியாக சென்னை செல்லும் அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமார் பண்ருட்டி அரசு மருத்துவமனையி்ல் சேர்க்கபட்டு, பின் மேல்சிகிச்சைசக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT