உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி

சங்கராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலியானார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மஞ்சபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (55). விவசாயி. இந்நிலையில் வயலுக்கு சென்ற இவர் அங்கிருந்த கிணற்றின் அருகே படுத்து தூங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி, பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, தீயணைப்பு வீரர்கள் மூலம் சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.