விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் அரங்கண்டநல்லூர் போலீசார் மணம்பூண்டி மேடு ரவுண்டானா அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை அழைத்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினார்.சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனையிட்டனர்.
அவரிடம் சிறு சிறு பொட்டலங்களில் கஞ்சா இருந்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சோலைவண்டிபுரத்தை சேர்ந்த சுப்பரமணி மகன் மோகன் என்கிற மோகன்ராஜ் (வயது 31) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, மேற்படி கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.