இடிக்கப்பட்ட குடிசை வீடு. 
உள்ளூர் செய்திகள்

குன்னத்தூர் அருகே வீட்டை இடித்ததால் தவிக்கும் குடும்பம்

2005 -ம் ஆண்டு அரசு மூலம் வீடு கட்ட பட்டா வழங்கப்பட்டது.குடியிருந்தவர்களை தாக்கி வெளியே தள்ளியதால் ராணி குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

குன்னத்தூர் :

குன்னத்தூர் அருகே வெள்ளரவெளி கிராமம் மைலம்பாளையத்தை சேர்ந்த ராணி என்பவருக்கு கடந்த 2005 -ம் ஆண்டு அரசு மூலம் வீடு கட்ட பட்டா வழங்கப்பட்டது. மேற்படி இடத்தில் அவர் குடிசை அமைத்து குடும்பத்துடன் குடியிருந்து வந்தார்.

இந்தநிலையில் இடம் தொடர்பான முன்விரோதம் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த கவுரி ( வயது 50), சாந்தி (50), மாணிக்கம் மூர்த்தி( 65), ராசு (54) மற்றும் அவரது உறவினர்கள் , ராணி குடியிருந்த வீட்டை இடித்து அகற்றியதாக கூறப்படுகிறது.

மேலும் ராணி , அவரது மகள் மோகனப்பிரியா (30), ராணியின் பேரன் கணேஷ்(2½) ஆகியோரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

குன்னத்தூர் நில வருவாய் ஆய்வாளர் நிலத்தை அளந்து கொடுப்பதாக கூறியிருந்த நிலையில் குடியிருந்தவர்களை தாக்கி வெளியே தள்ளியதால் ராணி குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து குன்னத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SCROLL FOR NEXT