உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகே வீட்டு தோட்டத்தில் கஞ்சா பதுக்கி விற்ற வியாபாரி கைது

போதை பொருட்கள் விற்றதாக 9 பெண் உள்பட 40 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். பாண்டியன் தோட்டத்தில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கஞ்சா, ேபாைத பொருட்கள் விற்பவர்களை கைது செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் நடந்த அதிரடி சோதனையில் குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்றதாக 9 பெண் உள்பட 40 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

எனினும் சிதம்பரம் பரங்கிபேட்டை பகுதியில் கஞ்சா பதுக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர் தனது வீட்டு தோட்டத்தில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து பாண்டியனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1500 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT