உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அருகே கடையின் மேற்கூரையை பிரித்து துணிகர கொள்ளை

ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பொருள்களையும் திருடி சென்றார்.சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே திருக்கோவிலூர் செல்லும் சாலையில் காணை தெற்கு வீதியைச் சேர்ந்தவர் குமரவேல். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 39). இவர் தனது வீட்டின் முன்பாக சிறிய பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையில் வியா பாரம் முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு இரவு தூங்கச் சென்றார். அப்போது நள்ளிரவு சமயம் அங்கு வந்த மர்ம நபர் கடையின் மேற்கூரையை பிரித்து கடைக்குள் புகுந்தார்.

இதனை அடுத்து கடையில் இருந்த ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பொருள்களையும் திருடி சென்றார். இன்று காலை வழக்கம் போல் புவனேஸ்வரி கடையை திறக்கும் போது கடையில் திருடு போயிருப்பது தெரி யவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி இது குறித்து காணை போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் காணை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT