2 கன்றுகளை ஈன்ற பசு. 
உள்ளூர் செய்திகள்

ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசு

நிசார் முகமது வளர்த்து வந்த பசுமாடு ஒன்று பிரசவித்திருந்தது.கிடாரி, காளை என 2 கன்றுகளை ஈன்றது.

மாலை மலர்

கபிஸ்தலம்:

பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அம்மா பள்ளி தைக்கால் பகுதியில் வசிப்பவர் நிசார் முகமது. வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

இவர் விவசாயத்திலும், கால்நடை வளர்ப்பிலும் அதீத ஆர்வம் கொண்டவர். இந்நிலையில், இவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று பிரசவித்திருந்தது.

திடீரென, அந்த பசு நேற்று முன்தினம் ஒன்றின்பின் ஒன்றாக கிடாரி, காளை என 2 கன்றுகளை ஈன்றது.

இதனை கண்ட நிசார் முகமது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மேலும், இதுகுறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் பசுவையும், 2 கன்றுகளையும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.