காயம் அடைந்த சங்கர். 
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே குடிபோதையில் வாகன ஓட்டிகளை மிரட்டியவர்கள் மீது வழக்கு

முத்துக்கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து.கோவில் உண்டியை கத்தியால் சேதப்படுத்தினர் .

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முத்துக்கி ருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது30) ,அதே பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர்கள் இருவரும் நேற்று மாலை 6 மணி அளவில் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு குடிபோதையில் அந்த வழியாக வந்த வாகனங்க ளை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டு ள்ளனர். தொடர்ந்து அதே பகுதியில் உள்ள கோவில் உண்டியை கத்தியால் சேத ப்படுத்தினர் .இவர்களை அந்த பகுதியை சேர்ந்த நாட்டாமை சங்கர் (வயது 45) தட்டிக் கேட்டுள்ளார்.

ஆத்திரம் அடைந்த போதை ஆசாமிகள் 2 பேரும் சங்கரை சரமாரி யாக தாக்கிவிட்டு தப்பி ஓடினர். காயமடைந்த சங்கர் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்து க்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய போதை ஆசாமிகளை தேடி வருகிறார்.

SCROLL FOR NEXT