பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி கீழே குதிப்பதாக மிரட்டல் விடுத்த பெண் ஒருவரை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், அவர் தர்மபுரி மாவட்டம், குறிஞ்சி பட்டியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரது மனைவி சுமதி என்பதும், கணவர் இறந்து விட்டதால் உறவினர்கள் வீடுகளில் தங்கிக் கொண்டு, கிடைத்த வேலையை செய்து வந்தார்.
இந்தநிலையில் குடிபோதைக்கு அடிமையான அவர் பல்லடம் அருகே காரணம் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தபோது, உறவினர்களுடன் தகராறு செய்துவிட்டு குடிபோதையில், செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது .இதையடுத்து, செல்போன் கோபுரம் அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில், தனியார் இடத்தில் அத்துமீறி நுழைந்ததாக சுமதி மீது பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.