விழுப்புரம்:
மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் ராஜு (வயது 38). இவர் கூட்டேரிப்பட்டில் இருந்து லோடு கேரியர் ஆட்டோவில் கருவாடு ஏற்றுக்கொண்டு திண்டிவனம் நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த இமாம் காசிம் (50) என்பவரும் சென்றார்.
திண்டிவனம் அடுத்த கன்னிகாபுரம் என்ற இடத்தில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது, அதே திசையில் பின்னால் வந்த கார் ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டிச்சென்ற ராஜி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற இமாம் காசிம் பலத்த காயமடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்துக்குள் ளான வாகனத்தை அப்புறப் படுத்தி போக்குவரத்தை சீர் செய்த போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.